பக்கம்:மொழியின் வழியே.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - - 31

நரம்பொடு வீணை நாவின்

நவின்றதோ என்று நைந்தார்.'

- (சீவக சிந்தாமணி - 658) (மிடறு கழுத்து: எயிறு - பல்) என்று அவையிற் கூடியிருந்தார் வியக்கும் வண்ணம் பாடினாள் என்பதை விளக்கினார். சிந்தாமணிக்கு உரை கண்ட நச்சினார்க் கினியர் இச்செய்யுளின் உரையில் இசை நூல் மேற்கோளுடன் பாடல் நெறிகளை எடுத்துரைத்து அவற்றுள் உள்ளாளப் பாடல் நெறியின் சிறப்பையும் விளக்கிக் கூறினார். உள்ளாளப் பாட்டுப் பாடுகின்றவர்கள், இடைபிங்கலையை இயக்க மறுத்து மூலாதர முதல் பிரமந்திரமளவும் இயக்கம் ஆக்கி நடுவுதொழில் வரப்பாட வேண்டும் என்பது நச்சினார்க்கினியர் விளக்கம். -

'கண்ணிமையா கண்டந்

துடியா கொடிறசையா பண்ணளவும் வாய்தோன்றா

பற்றெரியா - எண்ணிலிவை கள்ளார்நறுந் தெரியற்

கைதவனே கந்தருவர் உள்ளாப் பாட லுணர்.' - (கொடிறு - புருவம்) என்பது இப்பாடல் நெறிக்கு இசை நூல் மரபு கூறும் இலக்கணம். திருவிளையாடற் புராணம் விறகு விற்ற படலம், சிந்தாமணியில் மீண்டும் விமலையாரிலம்பகம் முதலிய பகுதிகளில் இசை பாடுவோர்க்கு ஆகாத குற்றங்களாக இவை விவரிக்கப்படுகின்றன.

நாளுக்குநாள் கலைத்துறையில் முன்னேறி வருகின்ற தமிழ் நாட்டு இசைவாணர்கள் தங்களுக்காக இவைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/33&oldid=621378" இலிருந்து மீள்விக்கப்பட்டது