பக்கம்:மொழியின் வழியே.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 35

வேறுபட்டுப்போய் முரண் அடைவதைக் கண்டிப்பதற்கு எழுந்த தொடர்தான் இப்பழமொழி. பாடுகின்றவனுக்கு உயர்ந்த கருத்தையும் படிக்கின்றவனுக்குத் தாழ்வான கருத்தையும் தருவதுதான் நெறிதுறை முரண்பாடு. நெறி, நீர் செல்லும் வழி. துறை, அந்த நீர் தங்குமிடங்களில் ஒன்று. செல்லும்போது தூயதாய்த் தங்கியபோது கலங்கி நாறுகிற நீர் போல உயர்ந்த இதயத்தில் உயர்ந்த நோக்கோடு பிறந்தும் கற்பார்க்குப் பயனில்லாத முறையில் பொருளமைந்த பாட்டு வீணான படைப்பாகும்.

'உள்ளத்திலே உண்மை ஒளி உண்டாயின் வாக்கினில் தூய்மை உண்டாம்' என்று பாரதி கூறுகின்றாரே அந்தத் தன்மை அமைந்தவன் எண்ணிய கருத்தைப் பயனுள்ளதாகப் பாட்டிலும், அதன் மூலமாகப் பாட்டைப் படிப்போர் இதயங்களிலும் ஏற்றி வைக்க முடியும். பாடுவதற்கென்று தான் கொண்ட நெறி, பாடலின் பொருளுக்கென்று தான் கொண்ட முறை, யாவும் பாட்டைப் படிக்கின்றவர்கள் படித்தபின் கொண்டே தீர வேண்டிய நெறிமுறைகளாக இருக்கவேண்டும்.

யார் பாடுவது?

மாடுகள், வண்டியை இழுக்கலாம்; இழுக்க முடியும்! வண்டி மாடுகளை இழுக்கலாமா? இழுக்கத்தான் முடியுமா? திருவள்ளுவர், கம்பர், செகப்பிரியர், காளிதாசர், ஒமர், மில்தன், பாரதியார், தாகூர் போன்றவர்கள் பாடினார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்கள் பாடலைப் படித்துப் பண்பட்டனர்.அவர்கள் பாடல்களைப் படித்துச் சீர்திருந்த வேண்டியவர்கள் எல்லாம் அவர்களாகவே ஆகமுயன்றிருந்தால்... பின்பு வண்டிமாடுகளை இழுக்க முயன்ற கதைதான். பாடத் தகுதி வாய்ந்த உள்ளொளி மிக்கவர்கள் பாட வேண்டும். மற்றவர்கள் படித்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/37&oldid=621382" இலிருந்து மீள்விக்கப்பட்டது