பக்கம்:மொழியின் வழியே.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மொழியின் வழியே!

பண்பட்டால் போதுமானது. எல்லாரும் உள்ளொளி பெற்ற கவிஞர்களாகவே இருந்து விடமுடியுமா? கொள்ளையின்பம் குலவு கவிதை கூறத்தக்க பாவலர்களே பாடவேண்டும்.

'நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்

இமைப் பொழுதும் சோராதிருத்தல்' என்று பாட்டை ஒரு குறிக்கோளாகக் கொண்டு நாட்டையும் சமூகத்தையும் உயர்த்துவதற்கு உழைக்கக் கருதுகிறவர்கள் பாடவேண்டும். பாட்டின் ஆசிரியன் தனக்குப் புகழ், பொருள், பெருமை ஆகியவற்றைத் தேடிக்கொடுக்கும் கருவியாக அதனை எண்ணக்கூடாது. பாட்டைச் சுவைக்கின்றவர்கள் பண்பட்டு உயரவேண்டும் என்பதைப் பாடுகிறவன் நோக்கமாகக் கொள்ள வேண்டும். எண்ணங்களைக் கோவை செய்து வரம்புக்குட்பட்ட சொற்களால் அழகிய முறையில் அழகிய கருத்துக்களுடன் வெளியிடும் ஆற்றலை இயற்கையிலே பெற்றவர்கள் பாடவேண்டும். கோத்துவைத்த எழுத்துக்களை அப்படியே வெள்ளைக் காகிதத்தில் கருப்பு மையால் பதித்துக் காட்டுகிற அச்சியந்திரங்களைப்போலக் கவியின் உள்ளமும் இருக்கக்கூடாது. உலகின் உயர்நிலை இழிநிலைக் காட்சிகளை மற்றவர்கள் காணாத ஒரு புதிய நோக்குடன் கண்டு தனக்கே உரிய சிந்தனைக் கலவையோடு அணிசெய்து படிப்போர்க்குக் கவர்ச்சி நிறைந்து தோன்றும்படி கூறும் தகுதிவாய்ந்தவன் எவனோ, அவன் பாடவேண்டும். அவன்தான் பாடத்தகுந்தவன்.

எதைப் பாடுவது?

'பல்வகைத் தாதுவின்

உயிர்க்குடல் போற் பல சொல்லாற் பொருட் கிடனாக

உணர்வினில் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/38&oldid=621383" இலிருந்து மீள்விக்கப்பட்டது