பக்கம்:மொழியின் வழியே.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மொழியின் வழியே!

'மரபு என்பது உள்ளத்திற் சொல்லாக்கி உணர்வுகளைக் கவிதை யாக்கும் மொழித்துறைக் கலைஞர்களுக்கு இரும்பு விலங்காக இடப்பட்டிருக்கிறது என்று நினைந்து விணே பழித்தல் பிழை. இலக்கியங்களைச்சமூகத்தோடு இணைக்கும் பொறுப்புடையதே மரபு. மரபினது பொறுப்பு அநாவசியம் என்ற எண்ணத்தோடு குலைக்கப்படுமானால் குளத்தின் கரைகள் நீர்நிறைந்துள்ள நிலையில் உடைத்துவிடப் பெறுவது போல் ஆகும். - காலமும் மரபும்

காலத்தோடு தொடர்பு படுத்திக் காணும்போது மரபு ஒரு பூச்செடியை ஒத்தது. ஒரே இடத்தில் ஒரே விதமான நீரும் மண்நிலையும் ஒரே பெயரும் பெற்று விளங்கினாலும் காலத்திற்கேற்பப் பூத்தும் பூக்காமலும் பெருமை, சிறுமை, மிகுதி, குறைவு ஆகிய வேறுபாடுற்றும் திகழும் இயல்பினது போலவே மரபும் விளங்கும். தான் ஒன்றாக இருந்தும் காலந் தோறும் சூழ்நிலை தோறும் மொழிவளர்ச்சிக்கு ஏற்பத்தான் என்ற ஒருமை மூலத்திற்கு அழிவு இன்றியே தன்னைப் பரந்த பன்மையாக மாறுபடுத்திக் கொண்டு வாழ்கிறது ւDITւ. இவ்வாறு பரந்த மனப்பான்மை உடையதாக விளங்கும் மரபை எழுத்தாலும், பேச்சாலும் உணர்வுகளாலும் இலக்கியத்தைப் படைக்கும் கலைஞர் சமூகம் குறுகிய நோக்கோடு புறக்கணிக்குமானால் அது எவ்வளவு பெரிய தவறு? உணர்வுகளை அனுபவித்துத் தானும் அவற்றின் ஆட்சிக்குப் பாத்திரமாக வேண்டிய நிலை வாழ்க்கை. உணர்வுகளை அனுபவித்து அனுபவித்துச் சிந்தனை பழகுதல் கற்பனைப் பயிற்சி. அவற்றை எல்லாம் சொல்வரம்புக்கு உட்பட்ட வெளியீடாக எழுதுவதோ, பேசுவதோ, இலக்கியம். இவ்வாறு பேசுவதற்கும் எழுதுவதற்கும் சொல்வரம்புடனே ஒருவகைப்பட்ட முறையும் இயல்பு குன்றாத சொற்பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/48&oldid=621393" இலிருந்து மீள்விக்கப்பட்டது