பக்கம்:மொழியின் வழியே.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 59

துற்விக்கு மட்டும் விழுச் செல்வமில்லை, சமூக வாழ்வில் பொதுநலத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு தனி மனிதனும் எவ்வளவிற்குத் தந்நலத்தைச் சுருக்கிக் கொண்டு தேவைகளைப் பெருகவிடாமல் வேண்டாமையைக் கடைப்பிடிக்க முடியுமோ அவ்வளவிற்குக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறின.

திருவள்ளுவர்துறவியைத் துறவியாக வாழச் செய்வதற்கு எந்த ஒரு பண்பு வேண்டுமோ அதைத் துறவிக்காகவே கூறுகிறார். அதே நேரத்தில் டால்ஸ்டாயும் காந்தியடிகளும் மனிதனைச் சமூக வாழ்வில் மனிதனாக வாழச் செய்வதற்கு எந்த ஒரு பண்பு வேண்டுமோ அதைத் தனி மனிதனுக்காகவே கூறுகின்றார்கள். இரு வேறு பக்கமும் சற்றே மாறித் தோன்றும் இந்தக் கருத்தமைப்பு என் சிந்தனையை வளர்த்தது. துறவிக்கு ஒன்றும் வேண்டாத நிலையே விழுச் செல்வம்' என்றால் பொது வாழ்வில் தனி மனிதனுக்கு அவ்வாறு இருக்க முடியுமா? திருவள்ளுவராவது பொதுவாழ்விலிருந்து விலகி வாழும் துறவிகளோடு வேண்டாமையைத் தொடர்பு படுத்துகிறார். ஆனால், டால்ஸ்டாயும், காந்தியடிகளும் இந்தப் பண்பை பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள சாதாரண மக்களோடும் தொடர்பு படுத்துகின்றார்களே...! இஃது எவ்வாறு பொருந்தும்? கருத்துப் பிழை அதனை நல்கும் இருவரில் எவர் பக்கமாவது இருக்கிறதா? அல்லது சிந்தனை செய்யும் நம் மதியில்தான் இருக்கிறதா? - என்பதே எனக்குப் புலனாகாமல் மயங்கினேன். மடியிலே கனமில்லாதவன் வழியில் பயப்படமாட்டான் அல்லவா? தேவையை நிறை வேற்றிக் கொள்வதற்காகப் படுகின்ற முயற்சித் துன்பமும் அது நிறைவேறாமல் முறிந்துபோனால் ஏமாற்றமடைகின்ற துன்பமும், தேவை என்றே. ஏதுமற்றவனுக்குக் கிடையா தல்லவா? *

வாழ்வில் ஊக்கம் பெறுவதற்குப் போதுமென்ற மனம் தான் வேண்டும். தேவைக்கு மீறிய பெருஞ் செல்வமும் ஒரு வகை வறுமைதான். மனத்தில் சூழ்ச்சியை விதைப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/61&oldid=621406" இலிருந்து மீள்விக்கப்பட்டது