பக்கம்:மொழியின் வழியே.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 71

வேங்கடத்திற்கும் குமரிக்கும் இடைப்பட்ட எல்லையில் மட்டும் தன் ஆளுகையை வைத்துக் கொள்ளும்படி நேர்ந்தது. 1. தமிழ்

தமிழ் என்ற பெயர் 'திராவிடம் என்ற வட சொல்லில் இருந்து பிறந்திருக்கலாம் என்று கால்டுவெல் கருதுகிறார். மற்ற மொழிக்காரர்கள் தமிழை அரவம் அரவபாஷா என்றும், தமிழர்களை அரவவாடு என்றும் குறிப்பிடுவது பற்றி 'டாக்டர் குண்டெர்ட் என்பவர் ஆராய்ந்து ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். தமிழில் அறநூல்கள் மிகுந்திருப்பதனால் அறவம், அறவமொழி என்று பெயர் ஏற்பட்டு, நாளடைவில் அப்பெயரே வல்லின ஒலி பிறழ்ந்து அரவம், அரவமொழி என்று வழங்கத் தொடங்கியிருக்க வேண்டும் என்கிறார். 'குண்டெர்ட்'. தமிழில் உள்ள 'அறம்' என்ற சொல்லே கன்னடத்தில் அரவு என வழங்குகிறது என்பார் இவர்.

கிரேக்க நூலாசிரியராகிய "டாலமி தமது யாத்திரை நூலில் சோழ மண்டலத்தைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, நெல்லூர்க் கரையில் வாழ்ந்த மக்களை அர்வாணி என்று குறித்தது இக்கருத்தாலேயே என எண்ணுவதற்கும் இடமிருக்கிறது. தமிழ் மொழி சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவருக்கும் உரியதாகப் பண்டை நூல்கள் கூறுகின்றன. இன்றோ சேர நாடாக முன்பிருந்த பகுதிகளில் மலையாளமே பெரிதும் வழங்குகின்றது. 'வண்புகழ் மூவர் தன் பொழில் வரைப்பு என்று தொல்காப்பியர் கூறிய காலத்தில் சேர நாட்டிலும் பெரும்பகுதி தமிழ் வழங்கிற்றுப் போலும்.

2. மலையாளம்

மலையாள நாட்டின் தோற்றத்தைப் பற்றிக் கேரளோற் பத்தி என்ற நூலும் பெரிய புராணம் என்ற நூலும் ஏறக்குறைய ஒரே அபிப்ராயத்தைத் தெரிவிக்கின்றன. பரசுராமர் நடுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/73&oldid=621418" இலிருந்து மீள்விக்கப்பட்டது