பக்கம்:மொழியின் வழியே.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 73

அம் மொழியில் கலந்திருக்கின்றன. மலையாள மொழியும் தமிழும் ஒத்திருந்ததால், தமிழிலிருந்துதான் மலையாளம் பிறந்தது என்ற கூற்றை டாக்டர் குண்டெர்ட் மறுக்கின்றார். மலையாள மொழியின் எழுத்துக்கள் வடமொழிக் கிரந்த எழுத்துக்கள் போலவே உள்ளன. மலையாள மொழி வழக்குப் பற்றிய சில உண்மைகளைத் திரு. கே. ராமகிருஷ்ணையா group3tu 'Studies in Dravidian Phylology' Graśrp [57GSlab @gefia, Isro, விளக்கியுள்ளார். இதைத் தவிர, வேறு சில நூல்களும் உள்ளன. 3. தெலுங்கு

மலையாளத்தைப் போலவே தமிழிலிருந்து தோன்றித் தமிழோடு நெருங்கிய தொடர்பு கொண்ட மற்றோர் மொழி தெலுங்கு. தமிழைப் போலவே பழம் பெருமையும் இலக்கிய நிறைவும் தெலுங்கு மொழிக்கு உண்டு. கிழக்கே பழவேற் காட்டிலிருந்து சிக்கை குளம் வரையிலும், மேற்கே மைசூரின் வட எல்லை தொடங்கி மஹாராஷ்டிர நாட்டின் தெற்கெல்லை வரையிலும் தெலுங்கு மொழி பேசப்படும் எல்லைகளாகக் கூறப்படுகின்றன. முகம்மதியர்கள் ஆட்சிக் காலத்தில் 'தெலுங்காணம்’ (தெலிங்காணம்) என்ற பெயர் இந்நிலப் பகுதிக்கு வழங்கி வந்தது. வட மொழி வாணர்கள் தெலுங்கு மொழி வழங்கும் நிலத்தை ஆந்திரமென்றும் தெலுங்கர்களை ஆந்திரர்கள் என்றும் கூறினர். தெலுங்கு மொழியிலும் தமிழ்ச் சொற்கள் உருமாறிக் கலந்துள்ளன. தெலுங்கு எழுத்தும் கிரந்த எழுத்துப் போலவே அமைந்துள்ளது. திரிகலிங்கம் என்பது மருவித் தெலுங்கு என்று பெயர் ஏற்பட்டதாகவும் ஒர் ஆராய்ச்சி உண்டு. தெலுங்கு மொழியின் ஒரு பிரிவைத் தமிழர்கள் வடுகு' என்று கூறினர். தமிழ் நாட்டு நாயக்கமார் பேசும் வடுகுக்கும் ஆந்திர நாட்டுத் தெலுங்கிற்கும் சிறிது வேறுபாடு இருக்கின்றதைக் காண்கிறோம். இதுபற்றிய சில விவரங்களை ஜி.ஜே.சோமயாஜி எழுதிய ஆந்திர பாஷா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/75&oldid=621420" இலிருந்து மீள்விக்கப்பட்டது