பக்கம்:மொழியின் வழியே.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.ப ார்த்தசாரதி 95

தமிழில் ஒரளவு சமூகம், சரித்திரம், துப்பறிவு, ஆகிய மூன்று வகை நாவல்களும் பெருக்கமாக வெளிவந்துள்ளன.

நாவல் எழுதவேண்டும் என்ற ஆர்வம் பல்வேறு நிலையிலுள்ள, பல்வேறு கொள்கைகள் உள்ள, எல்லா எழுத்தாளர்களுக்கும் தோன்றியிருக்கிறது. பல்வேறு பத்திரிகைகளிலும் தொடர் கதையும், நாவலும், இன்றி யமையாத அம்சம் ஆகிவிட்டது. தொடர் கதைகளோ, நாவலோ, வெளியிடாமல் விற்பனையைக் கணிசமாக உயர்த்த முடியாது என்ற நிலை பத்திரிகைகளுக்கு ஏற்பட்டு விட்டது. இது வரவேற்க வேண்டியதொரு நிலை தான்.

ஆனால் இன்னும் தமிழ்நாட்டு இலக்கியம் பிற நாட்டு அல்லது நம் நாட்டு மற்ற மொழிகளில் தோன்றியுள்ள நாவல்களோடு உயரிட இடத்தை அடையத்தக்க விதத்தில் வளர்ந்திருக்கிறதா? வளருமா? என்று ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். -

இப்படிச் சொல்வதை யாரும் தவறாக எண்ணிக் கொள்ளக்கூடாது. ஆர்வம் பெருகி யிருக்கிற அளவிற்கு இலக்கிய மதிப்புப் பெருகவில்லை. எழுதத் துடிக்கிற மனநிலை பலருக்கு இருக்கிறது. எப்படி எழுதினால் உலகத்தின் மிகச் சிறந்த நாவலாசிரியர்களோடு சரியாசனம் பெறத்தக்க நாவல்களை நாம் படைக்கலாம் என்ற சிந்தனைக்குப் பிறகு புதிய உத்திகளைக் கைக்கொண்டு எழுதும் நிலையை வரவேற்க வேண்டும்.

ஆனாலும் இன்றுள்ள நிலையிலேயே தமிழில் நல்ல நாவல்கள் ஒரு சிலவாவது தேறும். பத்துப் பதினைந்து நல்ல நாவலாசிரியர்கள்ாவது குறிப்பிட்டுச்சொல்லத்த்க்க விதத்தில் எழுதியவர்கள் என்ற பெருமையை அடைய முடியும் அதையும் மறுப்பதற்கு ജൂഖണങ്ങ. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/97&oldid=621441" இலிருந்து மீள்விக்கப்பட்டது