பக்கம்:மொழியைப் பற்றி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

மொழியைப் பற்றி.

மொழியில் கல்வி பயின்றவர்கள் எல்லா வகை யிலும் புறக்கணிக்கப்படுவதும் ஆகிச் சமூகத்தில் இருப்பவன் - இல்லாதவனைப் போல் ஒரு புதிய சாதியையே உண்டாக்கி வருகின்றனர். இந் நிலை உலகில் வேறு எங்கும் காண முடியாத ஒரு நிலை.

எந்த ஒரு மொழியும் மற்றொரு மொழியினர் மீது நேராகவோ மறைவாகவோ திணிக்கப்படும் போது அந்த வல்லதிகாரம் பகைமையை வளர்க்குமே தவிர பண்பாட்டை வளர்க்காது. தாய்மொழிக் கல்வியில் பயின்றால் அல்லது எந்த ஓர் இனமும் தலை தூக்க முடியாது. இதனை எண்ணிப் பார்க்கும் கூரிய சீரிய அறிவு அதி காரத்தில் இருப்பவர்கட்குச் சிறிதும் இல்லை. இந்தப் போக்கும் நோக்கும் உள்ளதைச் சிதைக் கும் புற்று நோயாகும்.

தாய்மொழிதான்் கலவியிலிருந்து ஆட்சி நிலைவரை அனைத்துத் துறையிலும் முதன்மை பெறவேண்டும் என்று கூறுவது, இருபத்தோராம் நூற்றாண்டில் கூறுவது நகைப்புக்கு இடமான செய்தியாகும். தமிழைப் போன்ற உயிர்ப்புள்ள - வேர்ச்சொல் மிகுந்த புதிய புதிய எண்ணங்கட் கெல்லாம் சொல்லாக்கத் திறனுடைய ஒரு மொழி - உலகின் மூலமொழி மற்ற எந்த ஒரு மொழியின் கீழும் - இரண்டாம் நிலையாக்கப்படு வது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

வாழ்வின் எந்த ஒரு நிலையிலும் தன்னல மும், பரந்துபட்ட மக்கட்குரிய செயலார்வமு மற்ற ஒரு தெளிவற்ற வறட்டுப் பிடிவாதமும் நம் நாட்டின் முன்னேற்றத்தையே பலவகை யிலும் கெடுத்து வருகிறது. அதில் மொழி உரிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/12&oldid=713809" இலிருந்து மீள்விக்கப்பட்டது