பக்கம்:மொழியைப் பற்றி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மொழியைப் பற்றி ...

நான் ஏற்க மறுக்கிறேன். நான் இதைக் குறித்து ஏற்கனவே 'உண்மை ஏட்டில் என் கருத்தை எழுதியிருக்கிறேன். இது வரை நான் கூறிய கருத்தை யாரும் மறுக்கவில்லை. உங்களின் ஏதுக்கள் எவையும் எனக்கு நிறைவு தருவதாக இல்லை. மாறாக அந்தக் காரணங்கள் என் கருத்தையே மிகுதியாக வலியுறுத்துகின்றன.

ஏராளமான சிறுபான்மையான இனங்களுக்கும், பின்தங்கிய நிலையில் உள்ள இனங்களுக்கும் உருசிய மொழி முன்னேற்றத் திற்குப் பெரிதும் பயன்பட்டு வந்திருப்பதை யாரும் மறுக்க இயலாது. ஆட்சிமொழி என்பது என்ன? உருசிய மொழியி லிருந்து மக்களை அடித்துத் தொலைவில் விலகிச் செல்ல பயன் படும் பிரம்பா? தேசியச் சிக்கலில் இணைந்துள்ள மக்களின் மனப்போக்கை ஏன் நீங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்? பெரிய மாநிலங்களாக நாட்டைத் துண்டாடவும், பொதுவான மொழியைக் கட்டாயமாகத் திணிப்பதும் முன்னேற்றத்தைத் தடுக்கத்தான்் நீங்கள் கூறும் ஆய்வுரைகள் பயன்படும்.

மக்கள் மனநிலையைவிட, அவர்களின் பொருள்நிலை மிகவும் இன்றியமையாதது. உருசியாவில் ஏற்கனவே முதலாளியப் பொருள்நிலை இருக்கிறது. அதனால் உருசிய மொழியை விட்டுக் கொடுப்பதற்கு வழியில்லை. உங்களுக்குப் பொரு ளியலின் ஆற்றலில் நம்பிக்கை இல்லை. இந்த வகையில் நீங்கள் பொருளியல் வளர்ச்சியை முறித்து முடமாக்குகிறீர் என்பது புலப்படவில்லையா? அதனால் வளர்ச்சி தடைபடும் என்பதை நீங்கள் உணரவில்லையா? காவல் துறை ஆட்சி குலையும்போது, அதன் விளைவாகப் புதுப்புது அமைப்புகள் ஆயிரக்கணக்கில் தோன்றுமா இல்லையா? உருசிய மொழியைப் பாதுகாப்போம் என்ற போலி முழக்கம் ஒப்பப்படும் நிலைதான்ே அதனால் ஏற்படும். இதன் காரணமாகவே, நான் உங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறேன்' என்று இலெனின் ஆட்சிமொழி பற்றி கருத்துக் கூறி இருக்கிறார், தாம் எழுதிய ஒரு மடலில்! ஒரே ஒரு மொழியை நாட்டின் ஆட்சிமொழியாகக் கொண்டு வர முயல்வது எவ்வளவு கேடானது என்பதையும், மக்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/38&oldid=713835" இலிருந்து மீள்விக்கப்பட்டது