பக்கம்:மொழியைப் பற்றி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மொழியைப் பற்றி....

உண்மையிலேயே வியக்கத்தக்க பல்வேறு சிறப்புகளைக் கொண்டது நமது உருசிய மொழி. எவர் மக்களை நேசிக் கிறார்களோ அவர்களுக்கு உருசிய மொழியின் வளம் புலப் படும். அதுவே வேர் போன்றும், கிளை போன்றும் வளர்ந் திருக்கிறது. நமது நாட்டின் எழிலைக் கண்டவர்களுக்கு இந்த உண்மை தெரியும்.

நமது மொழியில் காணப்படாத மேலான - எளிய ஓசை. வண்ணம், தோற்றம், சிந்தனைகள் எனத் துல்லியமான எதுவுமே இல்லாமல் இல்லை.

- கான்சுடான்டின் பாசுடோவாசுகி

ஐரோப்பிய மொழிகளில் காணப்படும் சிறந்த அறிவையும், உணர்வுகளையும், நமது மொழியின் மூலம் உண்டாக்க முடியும் என்கிற பெரிய உண்மையை நாம் உணர்ந்து ஏற்றம் பெற வேண்டும்.

- பியேடர் தாசுடோயேவஃகி

உருசிய மொழியும், பேச்சும் இயற்கையாகவே பெற்றுள்ள வளத்தை நினைக்கும்போதும், நாம் வாழும் காலத்திற்கு ஏற்றும், பொதுவான மக்களுடன் கொண்டுள்ள தொடர்பும், பூட்கின் படைப்புகளையும் கொண்டு, யார் வேண்டுமானாலும் எழுத்தாளனாகத் தகுதி பெற்றிட முடியும்.

- எம். எம். பிரிஃவின்

அறிவியல் கோட்பாடுகளைச் சுருக்கமாகத் தெளிவாகத் துல்லியமாக நமது மொழியின் மூலம் கூற முடியும்.

வளமான உருசிய மொழி மேலும் மேலும் வளமான மொழி யாக வியக்கத்தக்க வேகத்தில் வளர்ந்துக்கொண்டு வருகிறது.

- மாக்சிம் கோர்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/76&oldid=713873" இலிருந்து மீள்விக்கப்பட்டது