பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மலையாளத்தில் பத்து எனவும், கன்னடத்தில் பத்து எனவும், தெலுங்கில் பதி எனவும் வழங்குகின்றன. கன்ன. டத்தில் பத்து என்பது ஹத்து என மாறியுள்ளது. தெலுங்கு பதி என்பதனைப் பதின் என்பதன் னகரம் கெட்ட வடிவமாகக் கொள்ளலாம்.

மிதி என்பது பதி என்பதன் மாற்று வடிவமாகும்.

பேரெண்கள்

நூறு என்னும் சொல் வழக்கே தமிழ், மலையாளம், கன் னடம், தெலுங்கு மொழிகளில் வழங்குகின்றது. அடை வடிவம் நூற் என்பதாகும். வந்த என்னும் தனிச் சொல் தெலுங்கில் உள்ளது.

ஆயிரம் என்னும் தமிழ்ச்சொல் சாயிரம் என்பதன் திரிபாகும். சாயிரம் என்பது ‘ஸஹஸ்ர” என்னும் வடமொழி யிலிருந்து ஏற்கப்பட்ட சொல்லாகும். -

தெலுங்கில் வெய்யி என்ற தனிச்சொல் வழங்குகிறது. அதன் பன்மை வடிவம் வேலு என்பதாகும். இது திராவிடச் சொல்லாக இருக்கலாம் எனக் கருதப்பட்டாலும், இது வேறு எந்தத் திராவிட மொழியிலும் வழங்கவில்லை என்பர்.

மேலும் ஆம்பல், தாமரை, வெள்ளம் என்னும்பேரெண் களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

எண் முறைப் பெயர்கள்

ஒன்று, இரண்டு, மூன்று முதலியன எண்ணுப் பெயர் களாம். -

ஒரு ஓர் இரு, ஈர்: மு. மூ முதலியன எண் அடைப் பெயர்களாம். ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் முதலியன எண் முறைப் பெயர்களாம். இவற்றுள் “ஆம்” என்பது சற்று