பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

வடிவாகவும் அடையாகுங் க்ாலத்து வேருேர் வடிவாகவும் நிற்கும் எண்ணுப் பெயர்களைப் போல மூவிடப் பெயர்களும் இருவகை வடிவங்களைப் பெறும்.

யான்-என்; யாம்-எம்; நாம்-நம். நீ-நின்: நீர்-நும். தான்-தன்; தாம்-தம். ஏனைய திராவிட மொழிகளிலும் இவ்விருவகை வடி வங்கள் உள்ளன.

1. தன்மை ஒருமை

1. மலையாளத்தில் நான், ஞான் என வழங்குகின்றன கன்னடத்தில் பழைய வடிவம் ஆன் என்ப தாகும், 10ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே நான் என்பது வழங்கியது என்பர். என் என. நன் என்பன அம்மொழியில் குறுகிய வடிவங்களாகும்.

ஏனு, நேனு என்பன தெலுங்கில் எழுவாய் வடிவங் களாகும்; நன், நா, என்பன உருபேற்கத் திரிந்த வடிவங் களாகும்.

2. யான் என்பதே பழந்திராவிட வடிவமாக இருக்க வேண்டும். அதன் குறுகிய வடிவம் ‘யன்’ என்பது. யகரம் மொழி முதற்கண் வாராமையின், என் என உருபு ஏற்கத் திரிந்தது.9

3. தென்திராவிட மொழிகளிலும் வட திராவிட மொழி களிலும் யான் என்பது என் என வழங்க, மத்திய திராவிட மொழியில் அன் என்றே வழங்கியது. இந்த அன் என்பதே நா எனத் திரிந்து இருக்கவேண்டும். அனக்கு என்பது தெலுங் கில் நாக்கு என இடம்பெயர்ந்து வழங்குகிறது. நா என்பதே

1. D, N. பக். 177 2. D. N. பக். 179