பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மூவிடப் பெயர்கள்

1. மாற்றுப் பெயர்களுள் மூவிடப் பெயரும் ஒன்று. தன்மை, முன்னிலை, படர்க்கை என்பன மூவிடங்களாகும். திராவிட மொழிகளில் மூவிடப் பெயர்களுக்குள் பெரிதும் ஒற்றுமை நிலவுகிறது. -

யான் வந்தேன்-தன்மை நீ வந்தாய்-முன்னிலை தான் வந்தான்-படர்க்கை சுட்டுப் பெயர்கள் படர்க்கை இடத்தில் வருகின்றன.

அவர் வந்தார்-படர்க்கை

2. பொதுப் பெயர்களினின்று மூவிடப் பெயர்கள் கீழ்வரும் வகையில் அமைப்பால் வேறுபடுவதைக் காட்டுவர். மூவிடப் பெயர்கள் ஆரும் வேற்றுமைப் பொருளில் தம் முன் அடையைப் பெரு எனக் காட்டுவர்.

மகனுடைய வீடு-பொதுப் பெயர் மகனுடைய நான்-மூவிடப் பெயர் மகனுடைய நான் என வராது. இது மூவிடப் பெயர். களின் தனி அமைப்பாகும்.’

மூவிடப் பெயர்கள் ஒருமைப் பன்மைகளோடு திணை, பால்களையும் சுட்டும். எழுவாயாக நிற்குங்காலத்து ஒரு

1. D. N. L. 175