பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

பெற்ற படர்க்கைப் பெயர்களாகிப் பாலோடு திணையையும் சுட்டுதலின் இவை செல்வாக்குப் பெற்றுவிட்டன.

நான் தான் வந்தேன் - தற்சுட்டுப் பெயர் செய்யத் தான் வந்தேன்- இடைச்சொல் 2. சங்க காலத்தில் அவை படர்க்கை இடப்பெயர் களாக வழங்கியமைக்குக் கீழ்வரும் சான்றுகளைக் காட்டுவர்.’

“தானே கள்வன்-குறு 25/11 ‘அறியான் தானும்-குறு 74|3 “தான் தண்ணியள்'-குறு 84|5 3. யாய், ஞாய், எந்தை என்பனவும் நுந்தை என்பதும் , தந்தை என்பதும், முறையே தன்மை, முன்னிலை படர்க்கைக்கு உரியனவாகும்.

தம்பி, தங்கை, தமக்கை, தாய், தந்தை முதலியன முறையை உணர்த்துவன. அவை மூவிடித்திற்கும் உரிய பொதுச் சொற்களாகிவிட்டன. அதனல், என் தம்பி, உன் தம்பி, அவன் தம்பி என அடை கொடுத்துக் கூறும் மரபு ஏற்பட்டுள்ளது.

4. பழங்காலத்தில் நாம், யாம், நும், தாம் எனும் மூவிடப் பெயர்களைக் கொண்டு முறைப் பெயர்களை வழங் கினர். நம்பி, எம்பி, உம்பி, தம்பி என்ற சொற்கள் இவ்வாறு அமைந்தவையே. இந் நுட்பத்தையும், சிறப்பை யும், அமைப்பையும் கம்பர் உணர்ந்துள்ளார். தக்க இடத் தில் எடுத்துக் காட்டி இவற்றின் அழகில் தாம் ஈடுபட்டமை ண்பப் புலப்படுத்துகிரு.ர். -

தம்பிஎன நினைந்திரங்கித் தவிரான்அத் தகவில்லான் நம்பிஇவன் தனக்காணிற் கொல்லும்இறை நல்கானல் உம்பியைத்தான் உன்னைத்தான் அனுமணத்தான்

(ஒருபொழுதும் எம்பிபிரி யாகை அருளிதியான் வேண்டினேன்.”

-கும்பகருண வதைப்படலம்.

1. D. N. பக். i83