பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

6. சுட்டு, விளுப் பெயர்கள்

11. உயர்திணைச் சுட்டுப் பெயர்கள் அவன், அவள், இவன், இவள், அவர், இவர் முதலியனவாம். உவன், உவள், உவர். உவை) என்பன பழங்காலத்தில் வழங்கின; இக் காலத்தில் வழக்கிழந்து விட்டன: ஈழத்தில் மட்டும் பேச்சு வழக்கில் நிலை பெற்றுள்ளன. - .

2. அஃறிணைச் சுட்டுப் பெயர்கள் அது, இது, உது, அவை, இவை, உவை என்பனவாம். அது இது என்பன அஃது இஃது என உயிர்முன் மாறி வழங்குகின்றன. அவற்றை இவற்றை என்னும் வடிவங்களை நோக்க அவறு, இவறு என்பன பன்மையைச் சுட்டும் பழைய வடிவங்களாக இருந் திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. -

3. அவ், இவ், உவ் என்பன பழைய வடிவங்களே. வகரம் நீங்கிய அ, இ, உ என்பனவும் சுட்டுகளாகவே கருதப் பட்டன.

அதன், இதன், உதன் என்பன பழைய வடிவங்களாக இருந்திருக்க வேண்டும். பஃது பதின் என வழங்குதலைப் போல, அஃது, அதன் என வழங்கியிருக்க வேண்டும். சி+து-அஃது என்றாகியிருக்க வேண்டும். அவ் என்பதே சுட்டு அடிச்சொல்லாகும். அவ், இவ், உவ், தெவ் என்னும் இந் நான்கனையும் வகர ஈற்றுப் பெயர்கள் எனத் தொல்காப் பியர் குறிப்பிடுவார்.

4. பா என்பது வி ைஅடிச்சொல்லாகும். எவ், எ என்பன அதன் மாற்று வடிவங்களாகும். யார், யாவன் யாவள், யாது, யாவை என்பன விஞ அடியாகப் பிறந்த பால் காட்டும் விளுப் புெயர்களாம். எவன் என்ற சொல் அஃறிணை இருபால்களிலும் வழங்கியது. அஃது இக் காலத்தில் என்ன, என்ன, என் எனத் திரிபு பெற்றுள்ளது. என்ன என்பது பன்மை வடிவாகவும், என்னை என்பது ஒருமை வடிவாகவும் கருதப்படுகின்றன. இக் காலத்தில் என்ன என்பதே ஒருமைக் கும் பன்மைக்கும் பொதுவாக வழங்குகிறது.