பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

5. அது என்னும் தமிழ் வடிவே கன்னடத்திலும் மலையாளத்திலும் வழங்குகிறது. தெலுங்கில் அதி என வழங்குகிறது. அவன் எனும் தமிழ் வடிவு ஒலியிடம் பெயர்ந்து தெலுங்கில் வாடு என வழங்குகிறது. அவம் என்பது கன்னட வடிவு. மலையாளத்தில் அவன் என்றே வழங்குகிறது. அவர் எனும் தமிழ் வடிவு இடம் பெயர்ந்து வாரு எனத் தெலுங்கில் வழங்குகிறது. கன்னடத்தில் அவரு எனவும், மலையாளத்தில் அவர் எனவும் வழங்குகின்றன. இவர் எனும் தமிழ் வடிவு ஒலியிடம் பெயர்ந்து தெலுங்கில் விரு எனவும், கன்னடத்தில் இவரு எனவும், மலையாளத்தில் இவர் எனவும் வழங்குகின்றது.

6. யாவன் என்பது தெலுங்கில் எவடு எனவும், கன்ன டத்தில் ஆவரு எனவும் வழங்குகிறது. யாவர் என்பது எவரு, ஆவர் என முறையே தெலுங்கிலும், கன்னடத்திலும் வழங்கு கிறது. யார் என்பது தெலுங்கில் ஏரு எனவும், கன்னடத்தில் ஆர் எனவும் வழங்குகிறது. தமிழ் வழக்குகளே மலையாளத் தில் இடம் பெற்றுள்ளன. யா எனும் தமிழ் வடிவு தெலுங் கில் எகரமாகத் திரிபு பெற்றுள்ளது.

7. சுட்டும், வினவும் செய்யுளுள் நீண்ட வடிவங் களாகவும் வழங்குகின்றன. வழக்கிலும் ஆங்கு, ஈங்கு என நீள் வடிவங்கள் வழங்குகின்றன. எண்ணுப் பெயர்களும் மூவிடப் பெயர்களும் குறில், நெடில் வடிவங்களைப் பெற்றிருப் பது போலச் சுட்டும், வினவும் இருவகை வடிவங்களைப் பெற்றுள்ளன. இது திராவிட ம்ொழிகளின் பொது வியல்

பாகும்.