பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

15. திராவிடச் சொற்களில் ஆகும் அல்லது ஆதல்’ என்பதன் மாற்று வடிவங்கள் துணை உருபுகளாக நின்று பெயரடையாதல் உண்டு.

தமிழ்-ஆன ஆகும், உள்ள முதலியன தெலுங்கு-அடு, அயின முதலியன கன்னடம்-ஆத

ஒப்புமை அடைகளும் உயர்வு அடைகளும்

(1) இன் அல்லது இல் என்ற உருபு பெறல்

இன் என்பதே முதல் வடிவு (2) அவற்றாேடு ‘உம்’ சேர்தல் அவற்றினும் நல்லது அவற்றிலும் நல்லது (3) பார்க்க, காட்ட முதலியவற்றாேடு உம் சேர்ந்த இல் தொடர்தல் உண்டு. தனித்தும் வருதல் உண்டு. அதைப் பார்க்கிலும் இது நல்லது அவனைக் காட்டிலும் இவன் நல்லவன் அவனைவிட இவன் நல்லவன் (4) ஏகாரம் அல்லது தான் என்ற சொல் ஒப்பீட்டுப் பொருளில் வருதல் உண்டு.

இதுவே நல்லது; இதுதான் நல்லது. e (5) மிக, மிக்க, மிகவும் முதலிய மிகுதிப் பொருள் தரும் சொற்களும் வினையெச்சமாதல் உண்டு.

மிக நல்லது; மிகவும் நல்லது; மிக்க நல்லது (6) அடுக்கியும் வருதல் உண்டு.

மிகமிக நல்லது. (7) உறழ்ச்சியைச் சிறப்பிக்க எல்லாம் என்ற சொல் ஒப்பிடப்படும் பெயருக்கு முன்னல் சேர்தல் உண்டு.

எல்லா விலங்குகளிலும் வேங்கை கொடியது.