பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. வேற்றுமை

1. திராவிட மொழிகளில் வேற்றுமை உருபுகள் பின் நிலைகளாக (Post Positions) அமைந்துள்ளன. வேற்றுமை உருபுகள் தனிச் சொற்களின் திரிபுகள் என்பது அறிஞர் கால்டுவெல்லின் கருத்தாகும். எல்லா வேற்றுமை உருபு களையும் இவ்வாறு கொள்ளுதற்கில்லை. பண்டைக் காலத்து இவை சில சொற்களின் ஈறுகளாக இருந்திருக்க வேண்டும் எனக் கருத இடமுள்ளது.

2. இந்தோ, ஐரோப்பிய மொழிகளைப் போலப்

பன்மைக்கு ஒருவகை வேற்றுமை உருபு, ஒருமைக்கு ஒருவகை உருபு என்ற நியதி திராவிட மொழிகளில் இல்லை. பன்மை உருபு சேர்ந்த பிறகே வேற்றுமை உருபு இடம் கொள்ளும்.

3. வேற்றுமைக்கு முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை என எண்ணுல் பெயர் கொடுப்பதும் அதன் ஏனைய அமைப்பு முறையும் வடமொழி மரபை ஒட்டியதே என்பது கால்டுவெல்லின் கருத்தாகும். . -

தமிழில் இரண்டு முதல் ஏழு உருபுகளும் தொக்கும் விரிந்தும் வேற்றுமைப் பொருளைத் தரும்.

1. எழுவாய் வேற்றுமை

(1) தமிழில் எழுவாய் வேற்றுமை திரிபில் பெயராகும்.

அஃது எவ்வுருபையும் ஏற்பதில்லை. வடமொழியில் முதல்

வேற்றுமையும் உருபு ஏற்றல் உண்டு; ஆம் என்பது முதல்