பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

112

மலையாள மொழியிலும் ஐ என்பதே இரண்டன் உரு பாகும். பத்தாம் நூற்றாண்டிலிருந்து எ என்பது இடம் பெற்றதென்பர்.

ஆன், அன், அம், ஆ என்பன கன்னட உருபுகளாம்.

ன், னு, னி, னின் என்பன தெலுங்கு உருபுகளாகும்.

3. மூன்றாம் வேற்றுமை

இது கருவிப் பொருளையும், உடனிகழ்ச்சிப் பொருளையும் தரும். ஆன் என்பதே பழந்தமிழில் கருவி வேற்றுமை உரு பாகும். ஆல் என்பது நன்னூல் உடன் சேர்த்த உருபாகும். கொண்டு, பொருட்டு, உடன் என்னும் சொல்லுருபுகளும் கருவிப் பொருளில் வரும் என்பர்.

ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றி-புறம் 55/2 ‘உயிர்ப் பொருட்டால் நாண் துறவார்-திருக் 10/1 நெய்தல் பூவுடன் நெரிதரு தொடலை தைஇ

- -நற். 138-704 ஒடு, ஒடு என்பன உடனிகழ்வை உணர்த்தும் உருபு களாகும். .

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்-தொல். 512 “இளையரும் முதியரும் கிளையோடு குழிஇ-அகம். 348|12 என்பனவற்றை எடுத்துக் காட்டாகக் காட்டுவர்.8

மலையாளத்தில் ஆல், கொண்டு என்பனவும், கன்னடத்தில் இம், இன், இந்த என்பனவும், தெலுங்கில் னன், ன என்பன வும் கருவி உருபுகளாம். சே, சேத என்பன சொல்லுருபுகள்.

மலையாளத்தில் ஒடு, ஒடு என்பன உடனிகழ்ச்சி உருபு களாகும். கன்னடத்தில் ஒடனே என்பதும் தெலுங்கில் தோ, தோட என்பனவும் சொல்லுருபுகளாகும்.

1..N.I.3.267 2. D. N. பக். 262 3. D.N. u. 263