பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I13

4. நான்காம் வேற்றுமை

தமிழில் கு, க்கு என்பன நான்கன் உருபுகளாகும். மலையாளத்தில் க்கு என்பதும், தெலுங்கில் கு அல்லது கி என்பதும், கன்னடத்தில் கெ (ge) அல்லது கெ (ke) என்பதும் நான்கன் உருபுகளாகும். .

Qugjvgr out Lou%Tuff) (Scythin tablets of Behistan) இக்கி அல்லது இக்க என்னும் வடிவம் உள்ளது என்பர். இதனைக் கொண்டு திராவிட மொழிகளுக்கும், மத்திய ஆசிய மொழிகளான சித்திய மொழிகளுக்கும் தொடர்புள்ள தாகக் கூறுவர். -

முறைப் பெயர்களோடு உயர்திணைப் பெயர்கள் இணையு மிடத்து ஆறன் பொருளில் நான்கன் உருபு இடம் பெறும்.

சாத்தனுக்கு மகன் இக்குச் சாரியை புணரும் தொடர்களில் வரும் இக்கை நான்கன் உருபு என்றும், அஃது ஏழன் இடப் பொருளில் வருகிறதென்றும் குறிப்பிடுவர் !

ஆடிக்குக் கொண்டான் சித்திரைக்குக் கொண்டான் கடிநிலை இன்றே ஆசிரியர்க்க என்னும் தொடரில் க’ என்பதே நான்கன் உருபாக வந்துள்ளது. அது கு’ உருபன்று . 5. ஐந்தாம் வேற்றுமை

ஐந்தாம் வேற்றுமை உருபு இன் ஆகும். அது நீங்கல், ஒப்பு, எல்லை, எது என்னும் பொருள்களில் வரும். நின்று, இருந்து என்பன சொல்லுருபுகளாம். உவம உருபாகிய இன் என்பதே ஐந்தன் உருபாக மாறியதென்பர்.

மலையாளத்தில் இல், நின்று, இல்; நின்னு இன்னு ன்னு என்பனவும், பழங் கன்னடத்தில் இம் என்பதும், புதுக் கன்ன

1. D. N. u. 226

2. Caldwell L. 65

8