பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

டத்தில் அல்லிந்த அல்லது இல்லிந்த என்பதும் ஐந்தனுருபு களாம். புதுக் கன்னட உருபு இல், இருந்து அல்லது இல்,நின்று என்பவற்றோடு தொடர்பு கொண்டதாகத் தோன்றுகிறது. தெலுங்கு உருபாய ன் என்பது தமிழ் இன் என்பதோடு உறவுடையது. தெலுங்கில் உண்டி, னிஞ்சி என்பன சொல் லுருபுகளாக வழங்குகின்றன. அவை தமிழிலுள்ள இருந்து என்பதற்கு இணையானவையாகும்.

6. ஆரும் வேற்றுமை

அது என்பது ஆறாம் வேற்றுமை உருபாகும். அகரச்

சாரியையே ஆறன் உருபாக வருகிறது என்பதற்குப் பின்வரும்

எடுத்துக்காட்டுகளைக் காட்டுவர்.’

மரத்தகோடு -குறு. 99/4 நின்ன கண்ணி -புறம். 45/3 நின யானை -பரி. 19/85 நுன சீறடி (சிந்தா)

இன், அன் என்னும் சாரியைகளும் ஆறன் பொருளில் வருகின்றன என்பர்.” -

மெய்யின் இயக்கம் -தொல். எழு-46 பலவின் சினை -குறு. 153/2 நக்கதன் பயனே -குறு. 381/8

உடை, உடைய என்பன ஆரும் வேற்றுமைச் சொல்லுருபு களாகும்.

நின்னுடை வாழ்க்கை -பதி. 37 தம்முடைய தண்ணளி -சிலப். 7/32/1 தமிழில் மூவிடப் பெயர்களின் குறுகல் வடிவங்கள் ஆறன் பொருளில் வருகின்றன. -

என் புத்தகம்; நின் கை; தன்னுயிர்

1 , D. N. Ls. 271 2. D. N. L. 271