பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J 15

அவன், அவள், அவர் ஆகியன தொகையாக நின்று ஆறன் பொருளைத் தருகின்றன.

அவன் வீடு; அவள் அழகு; அவர் நிலை.

அது, இது என்பன ‘அன்’ சாரியை ஏற்று ஆறன் பொருளைத் தருகின்றன.

அதன் விலை, இதன் விலை உருபுகள் விரிந்து நின்று ஆறன் பொருளைத் தருவ

தனினும் தொகைச் சொற்களே பெருவாரியாக ஆறன் பொருளைத் தருகின்றன.

மரக்கிளை, குளத்து மீன், வீட்டு வாசல், காட்டுப் பசு, என் வீடு, எம் வீடு, நும் வீடு, தம் வீடு

மலையாளத்தில் தெ என்பது ஆறன் உருபாம். உடை, உடைய, உடெ என்பன சொல்லுருபுகளாம். உடை, உடைய

என்பன பழைய வழக்குகள்; தெ, உடெ என்பனவே தற்கால வழக்குகள்.

கன்னடத்தில் ட, ஏ என்பன ஆறன் உருபுகளாம்.

தெலுங்கில் அகரமே ஆறன் உருபாம். ஒக்க, ஒக என்பன சொல்லுருபுகளாம்.

ஊரகவி

நாபொக்க-என்னுடைய

10. ஏழாம் வேற்றுமை

இடப்பொருள் உணர்த்தும் சொற்களெல்லாம் திராவிட மொழிகளில் ஏழன் உருபாக அமைகின்றன. எனினும், சில சொற்கள் மட்டும் உருபுகளாகவே வழங்குகின்றன.

தமிழில் கண் என்பது இடப்பொருள் உணர்த்தும் உரு பாகும்.

கண் அகல் ஞாலம்