பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

தமிழில் இல் மிகுதியான வழக்குடையது. இஃது இன் என்பதன் திரிபாகும். -

கண், கால், புறம், அகம், உள், உழை, கீழ், மேல், பின், சார், அயல், புடை, தே முதலியனவும் ஏழன் உருபுகளாம்.’

மலையாளத்தில் இல், கல், கால், உள், பக்கல் என்பன ஏழன் உருபுகளாம்.

பழங்கன்னடத்தில் உள். ஒள் என்பன ஏழன் உருபு

&&TITLs),

புதுக் கன்னடத்தில் அல்லி’ என வழங்குகின்றது. தெலுங்கில் லோ என்னும் சொல்லுருபு வழங்குகிறது. இஃது உள் என்பதன் இடம் பெயர்ந்து வழங்கும் வடிவமாகும். மற்றும், அன், னி, அந்து என்பனவும் ஏழன் உருபுகளாம்.

அந்து என்பது சுட்டடியாகப் பிறந்த சொல்லுருபாகும். ஆன், அத்து என்பன சாரியைகளாயினும் அவை ஏழன் பொருளில் வரும் உருபுகளாகக் கொள்ளலாம்.”

பரணியாற் கொண்டான் பனியத்துக் கொண்டான்

11. விளிவேற்றுமை

திராவிட மொழிகளில் விளிவேற்றுமைக்குத் தனி உருபுகள் இல்லை. ஈற்று நிலை ஒலியழுத்தத்தாலும், நீள்வதாலும், ஈற்றயல் குன்றுவதாலும், ஏ, ஓ, முதலிய உயிர்கள் சேர்வ தாலும் பெயர்கள் விளித்தன்மை பெறுகின்றன.

பலர்பால் வடிவில் இர், ஈர் என்பன சேர்கின்றன. மலையாளத்திலும் ஏ சேர்தல், ஈற்று உயிர் நீட்சி, னகரம் கெடுதல் முதலிய மாறுதல்கள் நிகழ்கின்றன.

கன்னடத்தில் ஏ சேர்ந்து விளியாகிறது. சில ஈற்று உயிர்கள் நீடலும் உண்டு. இர் பலர்பால் ஈற்றில் சேர்கிறது.

1. தொல். 566 2. D. N. L. 273