பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

தெலுங்கில் ஆ அல்லது அ சேர்கிறது. ஈற்று உயிர் நீள்வும் ஒ அல்லது ஒ சேர்தலும் காணப்படுகின்றன. ஆரா அல்லது ஆர பலர்பால் ஈற்றில் சேர்கிறது.

12. சாரியைகள்

வேற்றுமைத் தொடர்களில் சாரியைகள் இடம் பெறுதல் உண்டு.

இன், வற்று, அத்து, அம். ஒன், ஆன், அக்கு, இக்கு அன் என்பன தொல்காப்பியர் குறிப்பிடும் சாரியைகள் ஆகும்.

தம், நம், நும், கெழு, உம், ஏ என்பனவற்றையும் உரை யாசிரியர்கள் சாரியைகள் என்பர்.

சில சாரியைகள் சில சமயங்களில் அல்வழித் தொடர் களிலும் இடம் பெறுதல் உண்டு.

சொற்களின் ஈறுகளே பல சாரியைகளாக அமைகின்றன என்பர் பேராசிரியர் தெ. பொ. மீ. அவர்கள்.”

1. A History of the Tamil Language.