பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வினைச் சொற்கள்

சிறப்பியல்புகள்

1. திராவிட அடிச்சொற்களோடு வேற்றுமை உருபுகள் சேர்ந்தால் பெயராகவும், காலக்கிளவிகள் சேர்ந்தால் வினை யாகவும் அமைகின்றன. -

வேற்றுமை உருபுகள் ஏலாமல் எழுவாயாக அமைவன Α Ο. , ι, , -- α - வும் பெயர்ச் சொற்களே.

2. திராவிட வினைகள் ஒட்டு நிலை வகையைச் சார்ந் தவை. அடிச் சொற்களில் எவ்வித மாற்றமும் விளைவிக்காம லேயே இலக்கண விகுதிகளைச் சேர்க்கலாம். எளிதில் பிரித்தும் காட்டலாம்.

3. ஏவற்பொருளில் வரும் பகுதிகள் பாலும் காலமும் உணர்த்தும் விகுதிகளைப் பெறுவதில்லை.

சிறுபான்மை ஒருமைப் பன்மைப் பாலுணர்த்தும் விகுதி களைப் பெறுதல் உண்டு. > *

4. காலங்கள் மூன்று எனக் கருதப்பட்டாலும் நிகழ் காலம் என ஒன்று தனிப்ாகப் பிரித்து அறியத் தக்க வினை வடிவங்கள் பழங்காலத்தில் இல்லை. இறப்பு, அஃதல்லாத காலம் என்ற இரண்டு பிரிவுகளையே பெற்றிருந்தன எனத் தெரிகிறது. -

15. விண்கள் எச்சம், முற்று என இருவகைப்படுகின்றன. பால் ஈறுகள் பெற்று விளங்குவன முற்று; அவ்வீறுகள் பெரு தன எச்சம் எனக் கருதப்படுகின்றன. இவை சொல் நிலையில் காணப்படும் அடிப்படை வேறுபாடுகளாகும்.