பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

மற்றென்றை எதிர்நோக்கி நிற்பது எச்சவினை; தானே பயனிலையாக அமைவது முற்றுவின. இவை தொடர் நிலை களில் காணப்படும் வேறுபாடுகளாகும்.

செய்யும் என்னும் வடிவம் முற்றாகவும் எச்சமாகவும் நிற்கின்றது.

சாத்தன் ஓடும் (செய்யும்-முற்று) ஓடும் சாத்தன் நல்லன் (செய்யும்-எச்சம்) 6. குறிப்பு வினைகள் பெயர் அடியாகவும், பண்பு அடியாக வும் பிறக்கும். அவை காலக் கிளவிகளை ஏற்பதில்லை. எதிர் மறை வினைகளுள் சில காலக்கிளவி இன்றி இயங்கும்.

7. வினைகள் பால்விகுதி பெற்றும் பெருமலும் இயங்கும்.

அவன் செய்வான் அவள் செய்வாள்

|பால்விகுதி பெற்றன. யான் செய்கு (செய்வேன்) அவன் செய்யும் (செய்வான்) 8. பழந்தமிழில் கால இடைநிலை தெளிவாகப் பிரித் தறியக் கூடிய நிலையில் இல்லை.

சங்க காலத்தில் த கரமும் இகரமும் இறந்த காலத்தை உணர்த்தின.

‘க'கரம் இறப் பொழிந்த நிகழ்வையும், எதிர்வையும் உணர்த்திற்று.

9. கால இடைநிலைகளோடு சாரியைகளும் வினைச் சொற் களில் இடம் பெறுதல் உண்டு.

வந்தனன்-வா+ந்+த்+அன்-அன் (அன்) 10. சங்க காலத்தில் நிகழ்கால இடைநிலை என்பது தனியாக இல்லை. செய்யும் என்ற வாய்பாடு நிகழ்காலத்தை உணர்த்தியது. கிறு, கின்று, ஆநின்று என்பன பிற்காலத்து வழக்குகளாகும். .

11. க., ப, வ என்பன எதிர்கால இடைநிலைகளாகும். அவற்றுள் ‘க'கரம் காலத்தால் முந்தியது.

} பால்விகுதிபெருதன.