பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

12. ‘த் என்பது இறந்தகால இடைநிலையாகும். ட். β என்பன அதன் மாற்று வடிவங்களாகும்.

இகரமும் அதன் மாற்று வடிவமான இன் என்பதும் இறந்த காலம் காட்டின. இவை சூழ்நிலைக்கேற்ப மாறி வருவன.

13. தமிழ் வினையமைப்பில் தன்வினை பிறவினை என்னும் பாகுபாடு அடிப்படையானதாகும். சில இயக்கு வினைகளாக வும் இயங்குகின்றன.

14. பொருள்களுக்கு ஏற்ப வினைவடிவத்திலும் மாறு தல்கள் நிகழ்கின்றன. அவற்றை வினைநிலை உரைத்தல் (indicative mood), graffourost (imperative mood), oftus; Grtsir Quirjoir (optative mood), 675 30%r (Conditional mood), Glarusi, s450%r (infinitive mood) s govo pa. யாகப் பிரித்துக் காண்பர்.

15. தெரிநிலைவின, குறிப்பு வினை என்னும் பாகுபாடு தமிழ் வினை அமைப்பில் காணப்படும் சிறப்பியல்பாகும். இத் தகைய பாகுபாடு வேறு எம் மொழியிலும் இல்லை.

16. வினை உடன்பாடாகவும், எதிர்மறையாகவும் அமை யும். ‘ஆ’ எதிர்மறை இடைநிலை எனக் கருதப்பட்டாலும் இல், அல் என்னும் வடிவங்கள் எதிர்மறையை உணர்த்தும் துணை வினைகளாகச் சேர்கின்றன. எதிர்மறை வினைகளுள் குறிப் பிட்ட காலத்தைக் காட்டுவனவும் உள; முக் காலத்துக்கும் உரிய பொது வினையாக வருவனவும் உள.

17. செயப்பாட்டுவினைக்குத் தனி விகுதி இல்லை எனினும் செய்வினைப் பகுதியுடன் படு, உண் முதலிய துணைவினைகள் சேர்ந்து அப் பொருளை உணர்த்துகின்றன.

18. தொழிற் பெயர், வினையாலணையும் பெயர், வினை யடிக் காரணப் பெயர், வினையடியாகப் பிறக்கும் பொதுப் பெயர் முதலிய பலவகைப் பெயர்கள் வினையடியாகப் பிறக் கின்றன.