பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

தல், அல், கை, மை, சி முதலியன தொழிற் பெயர் விகுதிகளாம். -

பாலீறு பெற்ற முற்று வடிவங்கள் தம் வினைப் பொருளை ஒழித்து, வினையுடைப் பொருளை உணர்த்துங்கால் வினயாலணை யும் பெயர் எனப்படும்.

அஃது ஏனைய பெயர்களைப் போல எழுவாயாகவும் நிற்கும்; ஏனைய வேற்றுமை உருபுகளையும் ஏற்கும்.

பொருநர், ஒட்டுநர், அறிஞர் முதலியன வினையடிக் காரணப் பெயர்களாம் (agent nouns).

வலைஞர் கலைஞர் முதலியன பெயரடியாகப் பிறந்த காரணப் பெயர்களாம்.

எழுது-எழுத்து, மின்-மீன், பண்-பாண், இரு-பு. இரும்பு, அறி+வு-அறிவு முதலியன வினையடியாகப் பிறந்த பொதுப் பெயர்களாம்,

19. ஒசைபற்றியும், குறிப்புப் பற்றியும், பண்பு பற்றியும் வரும் அடிச்சொற்கள் சேர்ந்து இரட்டிப்பதால், புதுப் பகுதி உண்டாகிறது. அஃது இரட்டைக் கிளவி என வழங்குகிறது.

சலசலப்பு - ஒசை பற்றியது பரபரப்பு - குறிப்புப் பற்றியது பசபசப்பு - பண்பு பற்றியது.