பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. வினை வகைகள்

1. தன்வினை பிறவினைகள்

கருத்தா தானே செய்யும் செயலை உணர்த்துவது தன்வினை யாகும்.

சாத்தன் படித்தான் சாத்தான் சேர்கிருன் - கருத்தா பிறரால் செய்விக்கும் செயலை உணர்த்துவது பிறவினையாகும்.

சாத்தன் படிப்பித்தான் சாத்தன் சேர்க்கிருன் வி, பி என்னும் பிறவினை விகுதிகள் அடுக்கி வருவன வற்றை இயக்கு வினைகள் என்பர். அவையும் பிறவினையிலேயே அடங்கும்.

அறிந்தான்; அறிவித்தான்; அறிவிப்பித்தான் என்பன முறையே தன்வினை, பிறவினை, இயக்கு வினைகள்ாம்.

(1) பகுதி இரட்டிப்பதால் பிற வினையாதல்

அடங்கு (தன்வினை)-அடக்கு (பிறவினை) மடங்கு (தன்வினை)-மடக்கு (பிறவினை) மெல்லின வடிவம் தன்வினையாகவும் வல்லின வடிவம் பிறவினையாகவும் அமைகின்றன. இது பகுதி இரட்டிப்பு. (2) இடைகிலே இரட்டிப்பதால் பிறவினையாதல் சேர்ந்தான்-சேர்த்தான் (இறப்பு)