பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ό

இ, எ, அ-இதழ் குவியா உயிர் ஒலிகள் (Non-lip Roundlng) -

இதழ் குவி முயற்சிபற்றி இவை பிரித்தறியப்படும். submmm gelsir (Retroflex sounds)

ட (t), ட (d) ண மூன்றும் வடமொழியிலும் தமிழிலும் உள்ளன. இவை திராவிட மொழிகட்கே உரிய ஒலிகள் என்றும், வடமொழி, திராவிட மொழிகளின்ரின்றும் இவற்றை ஏற்றுத் தமிழ் மொழிச் சொற்களில் புகுத்தியுள்ளன என்றும் அறிஞர் கால்டுவெல் கூறுவர். அதற்கு அவர் காட்டும் காரணங்கள் :

1. திராவிட் அடிச் சொற்களின் பொருள் உணர்ச்சிக்கு இவ்வொலிகள் அடிப்படையானவை. த வுக்கும் ட வுக்கும், ல வுக்கும் ள வுக்கும், ன வுக்கும் ண வுக்கும் இம் மொழிகளில் வேறுபாடு மிகவும் தேவைப்படுகிறது.

த, ட : குதி-குடி - ன, ண | மனை-மனை ; வெவ்வேறு பொருளின். ல, ள : கல்-கள்

2. வட மொழியோடு தொடர்புடைய இந்தோ-ஐரோப் பிய மொழிகளான கிரேக்கம், லத்தீன், கோத்திக், லித்து வேனியம், பாரசீகம் முதலிய எந்த மொழிகளும் இவற்றைப் பெற்றிருக்கவில்லை. எனவே, ஆரியர்கள் திராவிடர்களோடு தொடர்புகொண்ட பிறகே இவற்றை ஏற்றிருக்க வேண்டும்: சிறப்பாக எழுத்து மொழியாகிய வடமொழியைவிடப் பேச்சு மொழியாகிய பிராகிருதத்திலேயே இவை மிகுதியாக இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

3. வடமொழியினின்று பெறும் சொற்களைத் தமிழ், தம் ஒலி மரபுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் இயல்புள்ளது. ஷ, ஸ, ஹ முதலியவற்றைத் தமிழ் தம் ஒலிகளாக மாற்று தலைக் காண்கிருேம். இவை வடமொழிக்கே உரியன என்றால்