பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

இவற்றையும் தமிழ் மொழி மாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு மாற்றாமையால் இவை திராவிட மொழிகளுக்கே உரிய ஒலிகள் என்பது பெறப்படுகிறது.

4. தெலுங்கு மொழி வடமொழியோடு நெருங்கிய தொடர்பு கொண்டு அதன் சொற்களை ஏற்று வருகிறதென் முலும், தமிழ் மொழியிலேயே இவ்வொலிகள் பயிலும் சொற்கள் மிகுதியாக உள்ளன. எனவே, இவ்வொலிகள் வடமொழியின் தாக்குதலாக இருக்க முடியாது.

5. வடமொழியில் இவ்வொலிகளை நீக்கி எழுதினுல் பொருள் பிறழ்ச்சியோ, கேடோ உண்டாவ தில்லை. தமிழில் இவ்வொலிகளை நீக்கிவிட்டால் பல கருத்துகளைச் சொல்லச் சொற்களே இல்லாமல் போகும்; தமிழ்மொழி தன் வளத் தையும் இழந்துவிடும்.

Sp@gredissir (Aspirates)

‘ஹ'-இது மூச்சொலி (Aspirate) எனப்படும். செறி வாக மூச்சை வெளிப்படுத்தித் தள்ளும் பொழுது இவ்வொலி உண்டாகின்றது. இம் மூச்சொலி கலந்த வல்லொலிகளை மூச்சொலி கலந்த வல்லொலிகள் (Aspirated stops) என்பர்.

kh, gh, ch, jh; th (1–), dh (l-), th (5), dh (3), ph, bh இவை வடமொழியில் வழங்கும் மூச்சொலித் தடை ஒலிகள்,

மெய் இணைப்பொலிகள்

இரண்டு மெய்யொலிகள் சேர்ந்து ஒலிப்பின் அவை இணைப்பொலிகள் (clusters) எனப்படும். அவை வடமொழி யில் மிகுதி. த்யாகம் (த்ய்) ப்ரகாசம், (ப்ர்) முதலியன அவ் வகையின.

தமிழில் போன்ம், மருண்ம் முதலிய சொற்களில் ன்ம், ண்ம் இணைப்பொலிகளாக அமைந்துள்ளன. தொல்காப்பியர் போன்ம்’ என்ற வடிவை மட்டும் கூற நன்னூலார்