பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

‘மருண்ம் என்ற வடிவையும் கூறுகின்றார் சங்க இலக்கியத்தில் இவை பயின்று வந்துள்ளன. கேண்ம், சென்ம் எனவும் வழங்கின. இவை மொழியீற்றின்கண் அமைந்த இணைப் பெர்லிகளாகும்.

உயிர்களும் உடன் நிற்றல் உண்டு. அவையும் இணைப் பொலிகளாகக் கருதப்படும். அவற்றை உயிர் அளபெடை என்பர்.நெடிலின் பின் அதன் இனக்குறில் உடன் நிற்கும்.

ஆஆ. ஈஇ, ஊஉ, ஏஎ, ஐ.இ, ஒஒ, ஒளஉ தழு என்ற பகுதியோடு உ என்னும் சாரியை சேரும் பொழுது தழுவு என ஆகும். பழங்காலத்தில் தழுஉ என நின்றது. -

சிறு+அன்-சிறுவன்; சிருஅஅன்; குரு+இ-குருவி குரீஇ என்பன பிற சான்றுகள்.

ஆ.இ, ஒ,"இ என்பனவே ஆவி ஒவி என்றாகியிருக்கவேண் டும் எனப் பேராசிரியர் தெ. பொ. மீ. கருதுவர். இவை வகர உடம்படுமெய் பெற்ற வடிவங்களே.

ஆவி-ஆவியர் பெருமகன் (சிறுபாண். 86) ஒவி-ஒவியர் பெருமகன் (சிறுபாண் - 122) உடம்படுமெய் பெருமல் அளபெடை நிலையிலேயே பண்டைக் காலத்து இவை விளங்கின என்பர்.”

அசைஇ, நசைஇ என்னும் வடிவங்களே அளபெடை நீங்கி அசைந்து, நச்சி எனப் புதுவடிவங்கள் பெற்றுத் தற்காலத்தில் வழங்குகின்றன. ஒலியழுத்தம் (accent)

திராவிட மொழிகளில் ஒலியழுத்தம் உண்டு. இதனை எடுத்தல், படுத்தல், நலிதல் என்பர். பொதுவாக உயிர் ஒலி களில் இவ் வொலியழுத்தம் ஏற்படுகிறது.

1. A History of the Tamil Language—L. 169 2. A History of the Tamil Language—L. 66