பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

1. தபு என்பது படுத்துச் சொல்ல நீ சா எனத் தன் வினையாகவும், எடுத்துச் சொல்லச் சாகச்செய் எனப் பிறவினை யாகவும் பொருள்படும் என்பர் இளம்பூரணர்.

2. மெய்களிலும் ஒலியழுத்தத்தால் தன்வினை, பிறவினை வேறுபாடுகள் அமையும்.

சேர்கிறேன்-தன்வினை சேர்க்கிறேன்-பிறவினை (வல்லொற்றுத் தோன்றிற்று)

திருந்து-தன்வினை திருத்து+பிறவினை (மெல், வலியாயிற்று) 3. மருஉ முடிபுகள் பொருட் பகுதிகளைப் போற்றிக் காக்கின்றன. பகுதிகளில் ஒலியழுத்தம் நிலைபெறுகிறது.

ஆதன்தந்தை-ஆந்தை பூதன்தந்தை-பூந்தை மலைநாடு-மலாடு அருமருந்தன்ன-அருமந்த தஞ்சாவூர்-தஞ்சை

4. ஒலியழுத்தத்தால் செப்பு வாக்கியம், வின வாக்கிய மாகவும், ஐய வாக்கியமாகவும், வியப்பு வாக்கியமாகவும் அமைதல் உண்டு.

அவன் வந்தான்.--செப்பு வாக்கியம் அவன் வந்தான்?-வின வாக்கியம் அவன் வந்தான்! -ஐய வாக்கியம் அவன் வந்தான்!-வியப்பு வாக்கியம்