பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வல்லொலி மெல்லொலி மாற்றம்

கசடதபற ஆறும் வல்லினம் எனப்படும். றகரம் பழங் காலத்தில் தடையொலியாகவே ஒலிக்கப்பட்டது. அப் பழைய ஒலியை இரட்டிக்கும் (இணைந்து வரும்) இடத்தில் மட்டும் இன்றும் காணலாம்.

மாற்றம் கூற்று.

ஏனைய ஐந்து ஒலிகளும் பழங்காலத்தில் ஒலிப்பில் ஒலி களாக ஒலிக்கப்பட்டனவா, ஒலிப்பு ஒலிகளாக ஒலிக்கப் பட்டனவா என்பது ஆய்வுக்குரிய செய்தியாகும்.

கசடதப என்பவை தமிழில் மொழிக்கு முதலில் தனித்து வரு மிடத்தும் இரட்டிக்கு மிடத்தும். வல்லொலியாகவும் (surd), மெலியை அடுத்து வரும் இடத்தில் மெல்லொலியாக வும், (sonant) ஏனை இடத்து உரசு ஒலியாகவும் ஒலிக்கும் என்பர் அறிஞர் கால்டுவெல்.

கந்தன்-k வல்லொலி (ஒலிப்பில் தடை ஒலி) பக்கம்-k ; so ; p. பங்கு-g மெல்லொலி (ஒலிப்புத் தடையொலி) பகல்-h உரசு ஒலியாக ஒலிக்கிறது இவ்வாறே ஏனைய வல்லொலிகளும் மூவகை ஒலிகளைப் பெறும்.

சகரம் ஒன்று மட்டும் இக் காலத்தில் மொழி முதலினும் இடையினும் வருமிடத்தும் தனித்து வருமிடத்தும் உரசு