பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

6. தகரம் தனித்தோ, இணைந்தோ நின்று, தன்மை முன்னிலை வினைகளில் எதிர்காலத்தைக் காட்டுதல் உண்டு.

அஞ்சுதும், அறிதும்-த் } - ‘-த்த தன்மை வினே

படர்தி, அறிதிர்-த் o - சேறி, கோறி-ற் (த்) } முன்னிலை வினை

சேறி, கோறி என்பனவற்றிலுள்ள றகரம் தகரத்தின் திரிபாகும்.’

7. மார் என்னும் விகுதி எதிர்காலத்தை உணர்த்தும்” அது பண்டைக் காலத்து முற்றுப் பொருளிலும் எச்சப் பொரு ளிலும் வந்தது.

பிற்கால இலக்கணிகள் முற்றுப் பொருளில்தான் வரும் என்றனர்.

கொண்மார் (புறம். 15) காண்மார் (குறு. 4): தொல்காப்பியர் இதனைப் பல்லோர் படர்க்கை எனக் குறிப்பார்.

“மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை’

பெயரெச்சங்கள்

செய்கின்ற, செய்கிற என்பன நிகழ்காலப் பெயரெச்ச வடிவங்களாகும்.

செய்யும் என்பது எதிர்வையும் நிகழ்வையும் உணர்த்தும் பெயரெச்ச வாய்பாடாகவும் வரும்.

வரும் சிறுவன் நல்லன் (எதிர்வு) படிக்கும் பாடம் நன்று (நிகழ்வு)