பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

சங்க இலக்கியத்தில் செய்கின்று’ என்னும் வடிவம் இறந்தகால வினைமுற்றைக் குறிக்கிறது.

அது செய்கு+இன்+து என்பதன் சேர்க்கையாகும். ஐங்குறுநூற்று உரையாசிரியர் செய்கின்று என்பதற்கு நிகழ்காலப் பொருளில் உரை கூறியுள்ளார். இதுவும் பிறழ உணரும் உணர்ச்சியால் செய்-கின்று எனப் பிரித்துக் கின்று என்பதைத் தனி இடைநிலையாகக் கொண்டதன் விளைவே யாகும். -

செய்கின்று என்ற இறந்தகால வடிவமே பிற்காலத்து நிகழ்காலத்தை உணர்த்தத் தொடங்கி, கின்று என்னும் தனி இடைநிலை அமையக் காரணமாயிற்றெனத் தெரிகிறது.

எதிர்கால இடைநிலைகள்

1. ப, வ என்பன எதிர்கால இடைநிலைகளாகும். சூழ் நிலைக்கேற்ப இவை மாறிவரும்.

செய்வான்; உண்ணுவான்-வ உண்பான்; நடப்பான்-ப 2. செய்யும் என்னும் வாய்பாடும் எதிர்காலத்தை உணர்த்தும். இது முற்றுப் பொருளிலும் பெயரெச்சப் பொரு ளிலும் வரும். -

3. சில சொற்களில் வகரமும் பகரமும் பொருள் வேறு பாட்டிற்குக் காரணமாகின்றன.

சேர்வேன்-தன்வினை-வ சேர்ப்பேன்-பிறவினை-ப 4. சில சொற்களில் ககரம் எதிர்காலத்தை உணர்த்து கிறது.

செய்கு, செய்கம்; கான்கு, காண்கம்; ப்ாடுகேம் 5. பகரம் அகரத்தோடு சேர்ந்து படர்க்கைப்பன்மைப் பொருளையும் தருதல் உண்டு.

என்ப. ஆகுப, உண்ப