பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

மணிமேகலையிலும் பின்வரும் சொல்லில் இடம்பெற் றுள்ளது.

சாதிக்கின்ற! (மணி. 29.299) இச் சான்றுகள் அனைத்தும் பெயரெச்ச வடிவங்களே. ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் இது முற்று வடிவத்தில் இடம்பெறுகிறது. -

இலக்கண நூல்களுள் பதினென்றாம் நூற்றாண்டைச் சார்ந்த வீரசோழியமே முதன்முதலில் கின்று, கிறு என்னும் நிகழ்கால இடைநிலைகளைக் குறிப்பிடுகிறது.

பலவின்பால் முற்றில் மட்டும் கின்று என்ற வடிவம் இடம் பெறுகிறது.

கிறு, அம் முற்றில் இடம் பெறவில்லை. இது பேச்சுத் தமிழில் ர, க்ர எனத் திரிபு பெற்றுள்ளது.

வர்ரான், செய்ரான்; பாக்ரான் இடைக் காலத்தில் கின்று, கிறு என்பனவேயன்றி நில், கிட இரு என்பன ஆ என்பதனேடு சேர்ந்து நிகழ்காலத்தை உணர்த்தின.

ஆநின்று, ஆகிடந்து, ஆவிருந்து, என்பன உரைகளில் மட்டும் வருகின்றன.

செய்யாநின்று-இஃது இரு சொற்களின் சேர்க்கை. இதனைச் செய் + ஆநின்று எனப் பிறழப் பிரித்ததால் ஆநின்று என்னும் வாய்பாடு ஏற்பட்டது என்பர்.

வீரசோழியமும் நன்னூலும் ஆநின்று என்பதை நிகழ் கால இடைநிலை என்று கூறுகின்றன. இவ் விரு நூல்களும் ஆகிடந்து, ஆவிருந்து என்பனவற்றைக் குறிப்பிடவில்லை.”

1. D. V. M. LIs. 240 2. A History of the Tamil Language L. 142