பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மயிர் நீப்பின்’ இவ் வாய்பாட்டின் இன் என்பதற்கு மாருகத் திருக் குறளில் இல் என்பது வருகிறது.

உணில் -குறள்-922 பிற்காலத் தமிழில் இன் என்பதற்கு மாருக ஆல் இடம் பெற்றது. ஆல் என்பது ஆகில் என்பதன் திரிபாகும்.

அஃது சில இடங்களில் ஏல் எனவும் திரிபு பெறுகிறது. தமிழைப் போலவே மலையாளத்தில் இறந்தகால இடை நிலைகள் இடம்பெற்றுள்ளன. - ந்த் என்பது ஞ்ஞ் எனவும், த்த் என்பது ச்ச் எனவும் மாறி வருகின்றன.

கன்னடத்தில் த (d), த (t), ந்த், இத் (id), இ என்பன இறந்த கால இடைநிலைகளாக வருகின்றன.

தெலுங்கில் எ, இ, இதி என்பன இறந்தகால இடை நிலைகளாகும்.9 -

இம் மொழியில் வினையெச்ச வடிவங்களில் இகரம் வருகிறது.

நிகழ்கால இடைநிலைகள்

பழங்காலத்தில் நிகழ்வுக்கு எனத் தனிக் காலஇடைநிலை இல்லை. நன்னூல் கின்று என்னும் இடைநிலையை நிகழ்காலத் திற்குரியதெனக் குறிப்பிடுகிறது.

இவ் விடைநிலை முதன்முதல் பரிபாடற்கண் வந்துள்ளது.

சேர்கின்ற (பரி. 22-35) சிலப்பதிகாரத்திலும் கீழ்வரும் சொற்களில் இடம் பெற்றுள்ளது.

ஓசனிக்கின்ற, ஊர்கின்ற, உருள்கின்ற

1. D. V. M. Lijs. 112 2. D. V. M. Ls. 112