பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

இ, ஈ, ஏ, ஐ, என்னும் முன்னண்ண உயிர்கள் வருவழியே இம் மாறுதல் நிகழும்.

அய்ந்து என்பது அஞ்சு என ஆவதைப் போல உய்ந்து என்பது உஞ்சு என்றாகும். இவ்வாறு அப்பர் தேவாரத்தில் வந்துள்ளது.’

தற்காலத்தில் செய்தான் என்பது செஞ்சான் எனவும், பெய்தது என்பது பேஞ்சது எனவும் வழங்குகின்றன.

காய்ந்தது என்பது காஞ்சது எனவும், தீய்ந்தது என்பது -தீஞ்சது எனவும் வழங்குகின்றன.

படித்தான் என்பது படிச்சான் எனவும், நடித்தான் என்பது நடிச்சான் எனவும் வழங்குகின்றன.

இறந்தகால வினையெச்சம்

செய்து, உண்டு, தின்று என்பன இறந்தகால வினையெச்ச வடிவங்களாகும்.

செய்யா, செய்யூ, செய்பு என்னும் வாய்பாடுகளும், அழிஇ, தழிஇ போன்றனவும் பழந்தமிழில் வரும் இறந்த கால வினையெச்ச வடிவங்களாகும்.

புகா (புகுந்து); காணுTஉ; அருந்துபு

இறந்த காலப் பெயரெச்சம்

செய்த என்னும் வாய்பாடு இறந்தகாலப் பெயரெச்ச வடிவாகும். ஈண்டு அகர ஈறு பெயரெச்சத்தைக் காட்டு கிறது. இய என்பதும் இப் பெயரெச்ச விகுதியாக வரும்.

வந்த், பார்த்த, உண்ட ஒரீஇப், தழிஇய செயின் என்னும் வாய்பாடும் பழங்காலத்தில் வினையெச்ச மாக வழங்கியது. இது நிபந்தனை வினையாகும்.

1. D. V. M Lj;. 109