பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இகரம், இன், ன என மாறி வரும் குற்றுகர ஈற்றுச் சொற்கள் இவ்விடைநிலைகளைப் பெற்றுவரும்.

சிறுபான்மை முற்றுகர ஈறுகளும் பிற ச றுகளும் இவ் விடைநிலைகளைப் பெறுதல் உண்டு.

எஞ்சியது-எஞ்சு+இ+ய்+அ+து குற்றுகர ஈறு இகர இடைநிலை பெற்றது.

ஆடினன்-ஆடு+இன்-ஆன் கட்டின்ை-கட்டு+இன் + ஆன் குற்றுகர ஈறு இன் இடைநிலை பெற்றது. தாவினன்-தாவு + இன் + ஆன் முற்றுகர ஈறு இன் இடைநிலை பெற்றது. தழுவு, தள்ளு, அள்ளு, பண்ணு போன்றவையும் இவ்வாறு வருதல் காண்க.

போயின்ை-போ + இன் + ஆன்

பிற ஈறு இன் இடைநில்ை பெற்றது.

போனன்-போ-ன் + ஆன் - i பிற ஈறு னகர இடைநிலை பெற்றது.

பகுதி இரட்டித்து இறந்தகாலம் காட்டல்

சில பகுதிகள் இரட்டித்தும் இறந்தகாலம் காட்டுதல் உண்டு.

நக்கான்-நகு-நக்+த் + ஆன் விட்டான்-விடு-விட்+த்+ ஆன் உற்றான்-உறு-உற்+த்+ ஆன்

நீத் என்பது ஞ்ச் எனவும், த்த் என்பது ச்ச் எனவும் மாற்றம் பெறுதல் உண்டு. இம் மாற்றம் 7 ஆம் நூற்றாண்டி லிருந்து நிகழ்ந்திருக்க வேண்டும். இன்றைய பேச்சு மொழியில் இம் மாற்றம் மிகுதியாகக் காணப்படுகிறது.