பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. காலங் காட்டல்

இறந்த கால இடைநிலைகள்

பண்டைக் காலத்து இறப்பு, இறப்பல்லாத நிகழ்வு எனக் காலம் இருபிரிவுகளாகவே இருந்திருக்க வேண்டும். அக் காலத் திலிருந்தே இறந்தகால இடைநிலைகள் தெளிவாகப் பிரித் தறியக் கூடிய நிலையில் இருந்தன.

த், இ என்பன இறந்த கால இடைநிலைகளாகும். த், தனித்து நிற்றலேயன்றி ந்த் எனவும் த்த் எனவும் இனத்தோடும் தன்ளுேடும் இணைந்தும் வரும்; சூழ்நிலையால் டகரமாகவும் றகரமாகவும் மாற்றம் பெறுதலுமுண்டு. தகரத் துக்கு முன்வரும் எழுத்தே இம்மாற்றத்திற்குக் காரணமாகும்.

செய்தான்-செய்+த்-ஆன்-தனித்து வந்தது நடந்தான் - நட - ந்த்’ + ஆன் - இனத்தோடு

இணைந்து வந்தது படித்தான்-படி+ த்த்+ஆன்-தன்னோடு இணைந்து

வந்தது உண்டான்-டகரமாக மாற்றம் பெற்றது தின்றான்-றகரமாக மாற்றம் பெற்றது டகர றகர மாற்றத்திற்கு முறையே முன்னின்ற ணகர னகரங்களே காரணங்களாகும்.