பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. எதிர்மறை வினைகள்

1. எதிர்மறை இடைநிலைகள், முற்றுகள்

இன்று, இல்லை; அன்று, அல்ல எனும் தனிச் சொற்களைப் பெற்றுத் தொடர்நிலைகளில் எதிர்மறைப் பொருளை உணர்த் துவதோடு, சொல் நிலையிலும் எதிர்மறை இடைநிலைகளைப் பெற்றுத் திராவிட வினைச்சொற்கள் எதிர்மறைப் பொருளை உணர்த்துகின்றன. -

1. ஆ. இல், அல் என்பன எதிர்மறை இடைநிலை களாகும். இவற்றுள் ஆகாரம் புணர்ந்து கெட்டதாகக் கொள்ளுவர். -

செய்யான்-செய்+ஆ+ ஆன் வாரான்-வார்+ஆ+ ஆன் } } இல் வந்திலன்-வ+ந்+த்-இல் + அன் செய்யலன்-செ--ய்அல்-அன் வாரலன்-வார்--அல்-அன் } இக் காலத் தமிழில் மாட்டு என்னும் துணைவினையோடு ஆகரம் சேர்ந்து எதிர்மறைப் பொருளை உணர்த்துகிறது.

அல்

செய்யமாட்டான் வரமாட்டான். அல், இல் என்பன சங்க இலக்கியங்களிலும் துணைவினை களாக நின்று எதிர்மறைப் பொருளை உணர்த்தின.சி

1. D. V. M. u. 332 2. D. V. M. Lu. 334