பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

இக் குறிப்பு வினைமுற்று உடைமைப் பொருளிலும், இடப் பொருளிலும் வருதலோடு, அன்மை, இன்மை, உண்மை, வன்மை முதலாய பொருள்களிலும் வரும்.

அல்லன், அல்லள்-அன்மைப் பொருள் இலன், இலள்-இன்மைப் பொருள் உளன், உளள்-உண்மைப் பொருள் வல்லன், வல்லள்-வன்மைப் பொருள் நல்லன், தீயன், உடையன் என நன்மை, தீமை, உடைமை ஆகிய பொருள்களிலும் வருதல் காண்க. 3. பெயர், குறிப்பு வினைமுற்று-வேறுபாடு

பாலீறுகள் பெற்ற பெயர்களுக்கும், குறிப்பு வினைமுற்று களுக்கும் சிறுவேறுபாடு உண்டு. பெயர்கள் சாரியை பெறுவ தில்லை; குறிப்பு வினைமுற்றுகள் சாரியை பெறும்.

பெயர் குறிப்புவினை கண்ணன் கண்ணினன்

ஊரன் ஊரினன் அன்பன் அன்பினன் இல்லாள் இல்லினுள்

சில பெயர்ச் சொற்கள் பகுதி, விகுதி யெனப் பிரித்தறியக் கூடா நிலையில் பாலிறுகளைப் பெற்று நிற்றல் உண்டு. அவை குறிப்பு வினைகள் அல்ல.

தலைவி, தோழி, வண்ணத்தி

4. தெரிநிலை, குறிப்புவினை-வேறுபாடு

1. தெரிநிலை வினைகள் பகுதியளவில் நின்றும், ஏவல், வியங்கோள் விகுதிகளைப் பெற்றும் ஏவற் பொருளையும் வியங் கோள் பொருளையும் உணர்த்தும்.

10