பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

குறிப்பு வினைகள் ஏவற் பொருளையோ, வியங்கோள் பொருளையோ உணர்த்தா.

2. தெரிநிலை வினைகளுக்குச் செயலை உணர்த்தும் வில் களே பகுதியாக வரும்.

குறிப்பு வினைகளுக்குப் பெயர்களும், பண்புச் சொற்களுமே பகுதியாக வரும்.

3. தெரிநிலை விண்கள் கால இடைநிலைகளைப் பெறும்: குறிப்பு வினைகள் அவ்வாறு பெறுவதில்லை.

4. தெரிநிலை வினைகள் எதிர்மறை இடைநிலைகளை ஏற்று எதிர்மறைப் பொருளை உணர்த்தும்.

குறிப்பு வினைகள், பொதுவாக எதிர்மறை இடைநிலைகளை ஏற்பதில்லை. அன்மை, இன்மை, முதலாய அடிச் சொற்களே எதிர்மறைப் பொருளை உணர்த்தலின் தனியாக எதிர்மறை இடைநிலையை அவை பெறுவதில்லை.

சில சொற்களில் மட்டும் ஆகாரம் சேர்ந்து எதிர்மறைப் பொருளைத் தருகின்றது.

அது இன்னது அவை இன்ன 5. தெரிநிலை வினையில் வாரா, தின்ன என அடிச்சொற் களோடு ஆகாரம் சேர்ந்து எதிர்மறைப் பொருளை உணர்த் துதல் போலக் குறிப்பு வினைமுற்றுகளில் வருவதில்லை.

6. தெரிநிலை வினைகள் அன் சாரியை ஏற்கும். குறிப்பு வினைகள் இன் சாரியை ஏற்கும்.

தெரிநிலை குறிப்பு நடந்தனன்-அன் அன்பினன்-இன் 7. தெரிநிலை வினைகள் இக் காலத்தும் பயின்று வழங்கு கின்றன. குறிப்பு வினைமுற்றுகள், செய்யுள், வழக்கு இரண் டிலுமே வழக்கிழந்துவிட்டன.