பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15?

சாத்தன் வந்தான் சாத்தி வந்தாள் }x சான்றாேர் வந்தனர் - அது வந்தது o அவை வந்தன அஃறிணை

படர்க்கை

நீ வந்தாய் & —anciranfo% நீயிர் வந்தீர் }விரவுத்தின முன்னிலை

யான் வந்தேன் - - யாம் வந்தேம் } விரவத்தின-தன்மை தன்மை, முன்னிலை இருதிணைக்கும் பொது. தன்மையை உயர்திணைக்கே உரித்தென்பார் தொல்காப்பியர்.

11. தொடர்நிலை வேற்றுமைத் தொடர், அல்வழித் தொடர் என இருவகைப்படும்.

இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை ஆறு உருபுகளும் வெளிப்பட்டும் தொக்கும் நிற்கத் தொடரும் தொடர் வேற்றுமை எனப் பெயர்படும்.

எஞ்சி நின்ற 1. எழுவாய்த் தொடரும், 2. விளித் தொடரும், 3. வினைமுற்றுத் தொட்ரும், 4. எச்சத் தொடரும், 5. இடைச் சொற்றாெடரும், 6. உரிச்சொற்றாெடரும், 7. அடுக்குத் தொடரும். 8. வினைத்தொகையும், 9. பண்புத் தொகையும், 10. உவமைத் தொகையும், 11. உம்மைத் தொகையும், 12. அன்மொழித் தொகையும் அல்வழி எனப் படும். -

இவற்றுள் முன்னைய ஏழும் அல்வழித் தொகாநிலையென வும், ஏனைய ஐந்தும் அல்வழித் தொகைநிலை எனவும் வழங்கும். 12. தொடர் நிலைக்கண் வரும் சொற்கள் ஒன்றன ஒன்று பொருளாற்றழுவி நிற்றல் வேண்டும். அவ்வாறு நிற்கும் தொடர்கள் தழுவு தொடர் எனப்படும்.

வினைமுற்றும், பெயரெச்சமும் பெயரையும் வினையெச்சம் வினையையும் தழுவி நிற்கும்.