பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

செய்யும் பொன்னன் வந்தான் } அடைமொழிப்பொரு வந்தான் செய்யும் பொன்னன் ௗன-பெயரெச்சம் எச்சப் பொருள் படுங்கால் எழுவாய் பிறிதோர் வினையைப் பயனிலையாக ஏற்றல் காண்க.

8. வான், பான், பாக்கு என்பன முற்றுகளாக வழங்கிப் பின் எச்சங்களாக மாறியிருக்க வேண்டும்.

அவன் செய்வான்-முற்றுப் பொருளது அவன் செய்வான் வந்தான்-எச்சப் பொருளது எச்சப் பொருள்படுங்கால் எழுவாய் பிறிதோர் வினையைப் பயனிலையாக ஏற்றல் காண்க.

எச்சங்கள் திணை, பால் காட்டா. 9. (பண்பும், சினையும், முதலும் தொடருங்கால் பண்பு (அடை), சினை, முதல் எனும் முறையில் தொடர்தல் வேண்டும். செய்யுளுள் சினையடை முதலடையாக முறைமாறி நிற்றலும் உண்டு.

கருங்கைக் கொல்லன்

செங்கால் நாரை } முறையே நின்றன

கைக்கருங் முறைமாறி கால்செந் நாரை நின்றன 10. இயற்பெயரும் கல்வி, குடி, தொழில் முதலிய வற்றான் வரும் சிறப்புப் பெயரும், ஒரு பொருள்மேல் வரின் சிறப்புப் பெயர் முன்னும் இயற்பெயர் பின்னும் வருதல் வேண்டும்.

புலவன் தொல்காப்பியன்-கல்வி பாண்டியன் நெடுஞ்செழியன்-குடி ஆசிரியன் அகத்தியன்-தொழில் எழுவாய், பயனிலையாகத் தொடரும் தொடர் நிலைக்கண் எழுவாயும், பயனிலையும் திணை, பால், எண் இடங்களால் ஒத்தியைதல் (concord) வேண்டும்,