பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

செய்தான் சாத்தன்-வினைமுற்றுத் தொடர் பின்வரும் தொடர்களும் வினைமுற்றுத் தொடர்களாக இருந்திருக்க வேண்டும்.

செய்யும் சாத்தன் செய்கு யான் வந்த சாத்தன் வந்து அவன்

இவற்றுள் வந்து அவன் என்பது வந்தான் என இணைந்து ஒரு சொல்லாகிப் பின் மீண்டும் ஒரு பெயரைப் பெற்று வந்தான் அவன் என்றாகி இருக்க வேண்டும்.

இதல்ை, இன்று வினையெச்சங்களாக உள்ளவை அனைத் தும் பண்டைக் காலத்து முற்றுகளாக வழங்கியிருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது.

செய்தான் சாத்தன் - வ்ந்தான் அவன் என்பன போன்ற வினைமுற்றுத் தொடர்கள் பிற்காலத் தில் முன்பின்னக மாறிச்

சாத்தன் வந்தான் அவன் வந்தான் என எழுவாய்த் தொடர்களாக அமைந்திருக்க வேண்டும். 6. மலையாள மொழியில் அவன் வந்து (வந்து) என்பதே தொடர்நிலை. ஆண்டு முற்றுகள் பாலிறுகளைப் பெறுவதில்லை. 7. செய்யும் என்னும் வாய்பாடு பயனிலைப் பொருளைத் தருங்கால், முற்று எனவும் அடைமொழிப் பொருளைத் தருங்கால் பெயரெச்சம் எனவும் வழங்கும்.

செய்யும் பொன்ன்ன்

பொன்னன் செய்யும் } பயனிலைப் பொருளன-முற்று