பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I49

13. வடமொழியில் பெயர்களே அன்றிப் பெயரடை களும் பாலையும், எண்ணையும் உணர்த்துகின்றன. இந்தி மொழியும் இவ்வமைப்புடையதே.

அச்சா லட்கா-நல்ல பையன் அச்சி லட்கி -நல்ல பெண் அச்சே லட்கே-நல்ல பையன்கள் தமிழ் மொழியில் பெயரடைகள் பால், எண் காட்டுவ தில்லை. அவை இருதிணை ஐம்பால்களுக்குப் பொதுவாக வழங்குகின்றன.

நல்ல சிறுவன்-ஆண்பால்

நல்ல சிறுமி-பெண்பால் }9 நல்ல மக்கள்-பலர்பால்

நல்ல மாடு-ஒன்றன்பால் } o நல்ல மாடுகள்-பலவின்பால் அஃறிணை 4. ஆங்கில மொழியில் ஆண்பாற் படர்க்கையில் மட்டும் எழுவாயும் பயனிலையும் பால் இயைபு பெறுதல் உண்டு.

He comes ஏனைய இடங்களில் அந் நியதி இல்லை; பண்டைக் காலத் தில் இருந்திருக்கலாம்.

Thow cometh; He comes முன்னிலைப் பெயரிலும் ஆங்கிலத்தில் ஒருமைப் பன்மை வேறுபாடு மறைந்து விட்டது.

You

இஃது ஒன்றே முன்னிலை ஒருமைப் பன்மைக்குப் பொது வாக வழங்குகிறது.

5. பண்டைத் தமிழில் முற்று முன்னும் அது கொள்ளும் பெயர் பின்னுமாக வரும் தொடர்களே (வினைமுற்றுத் தொடர்கள்) வழக்கிலிருந்தன எனலாம்,