பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. தொடரியல்

1. தமிழில் தொடர் அமைப்பின் அடிப்படையிலேயே சொல்லிலக்கணமும்,எழுத்திலக்கணமும் ஆராயப்படுகின்றன.

தொடர் இலக்கணம் அல்வழித் தொடர், வேற்றுமைத் தொடர் எனும் இருவகை நிலைகளில் ஆராயப்படுகிறது.

நிலைமொழி, வருமொழி புணரும் புணர்ச்சி, இவ்விரு வகை நிலைகளில் அமைகிறது.

2. தொடர் நிலைகளில் திராவிட மொழிகள் வடமொழி களினின்றும் பெரிதும் அடிப்படையிலேயே வேறுபடுகின்றன.

முதலில் எழுவாயும், அடுத்துச் செயப்படுபொருளும், இறுதியில் பயனிலையும் நிற்றல் தமிழ் மரபாகும்.

சாத்தன் வீடு கட்டினன். வடமொழியில் செயப்படுபொருள் இறுதியில் நிற்கும். ஆங்கிலமும் இவ் வமைப்பினதே. Sathan bought a houe செய்யுளிலும், உணர்ச்சி நிலையிலும் இம் முறைமாறி வருதலும் உண்டு. -

‘கண்டனன் கற்பினுக் கணியை"-கம்பர்

பார்த்தேன் அவளே நேற்று’ (பேச்சு மொழி)